Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2021 (வெள்ளிக்கிழமை)

"மாட்சிமை வாய்ந்த இளவரசரின் உயிர் இன்று காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் பிரிந்தது," என்று அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த எடின்பரோ கோமகன், கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்ற பிறகு வின்சர் கோட்டைக்கு திரும்பினார்.

அவரது மறைவு தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தனது நேசத்துக்குரிய கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் இறந்து விட்டார் என்ற தகவலை மாட்சிமை பொருந்திய அரசி ஆழ்ந்த வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் அவர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "எண்ணற்ற இளைஞர்களால் ஈர்க்கப்பட்டவர் இளவரசர்," என்று கூறியுள்ளார். பிரதமர் இல்லம் அமைந்த டெளனிங் வீதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரிட்டனில் பல தலைமுறை மக்களிடமும் காமன்வெல்த் நாடுகளிலும் உலக அளவிலும் அன்பைப் பெற்றவர் அவர்," என்றும் கூறினார்.

கோமகனின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனையின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அவரது இறப்புச் செய்தி அடங்கிய நோட்டீஸ்கள், வாயில்களில் ஒட்டப்பட்டிருந்தன.

அரண்மனைக்கு வெளியே மக்கள் மலர் கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்த, நூற்றுக்கணக்கானோர் வின்சர் கோட்டையைப் பார்வையிட்டு மரியாதை செலுத்தினர்.

எனினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக, அத்தகைய மலர் கொத்துகளை அரச குடும்பத்து மாளிகை பகுதிகளில் விட்டுச் செல்ல வேண்டாம் என பொதுமக்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பூங்கொத்துகளை விடுவதற்கு பதிலாக, கோமகனின் நினைவாக அறக்கட்டளை பணிகளுக்கு நன்கொடை அளிக்குமாறு அரச குடும்பம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இரங்கல் தெரிவிக்க வசதியாக, அரச குடும்பத்து இணையதள பக்கத்தில் இரங்கல் பதிவிடும் வகையில் இணைய பக்கம் திறக்கப்பட்டுள்ளது.

இறுதி நிகழ்ச்சி எப்போது?

இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்ச்சி, வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டாலும், அது கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் என அரச குடும்பத்து காரிய சேவை பணிகளை கவனிக்கும் அமைப்பான காலேஜ் ஆஃப் ஆர்ம்ஸ் தெரிவித்துள்ளது.

அரசு முறை இறுதி நிகழ்வாக கோமகனின் இறுதி நிகழ்வு இருக்காது என்றபோதும், அவரது விருப்பத்தின்படி உரிய சடங்குகளுடன் நடத்தப்படும் என்றும் காலேஜ் ஆஃப் ஆர்ம்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இளவரசர் ஃபிலிப், கிரேக்க தீவான கோர்ஃபுவில் 1921ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்தார்.

அரச குடும்பம்இந்த தம்பதிக்கு நான்கு பிள்ளைகள், எட்டு பேரக்குழந்தைகள், 10 கொள்ளுப்பேரப்பிள்ளைகள் உள்ளனர்.அரசி மற்றும் இளவரசர் ஃபிலிப்பின் முதல் மகனும் வேல்ஸ் இளவரசருமான சார்ல்ஸ், 1948இல் பிறந்தார். இவரைத் தொடர்ந்து இளவரசி ஏன் 1950இலும், யோர்க் கோமகன் ஆண்ட்ரூ 1960இலும், இளவரசர் எட்வர்ட் 1964இலும் பிறந்தனர்.



மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017